Latestமலேசியா

தொடர் மழைக்கு நன்றி: வரண்டு போயிருந்த தைப்பிங் ஏரி & புக்கிட் மேரா அணைக்கட்டில் மீண்டும் தண்ணீர்

தைப்பிங், ஆகஸ்ட்-14, பேராக்கில், கடும் வறட்சியால் வரண்டு போயிருந்த தைப்பிங் ஏரி பூங்கா (Taman Tasik Taiping) மற்றும் புக்கிட் மேரா அணைக்கட்டு (Empangan Bukit Merah) இரண்டும் ஏறக்குறைய வழக்க நிலைக்குத் திரும்பியுள்ளன.

கடந்த சில வாரங்களாக அங்கு அடிக்கடி மழை பெய்ததே அதற்குக் காரணமெனக் கூறப்படுகிறது.
குறிப்பாக முற்றாக வற்றிப் போயிருந்த தைப்பிங் ஏரியில், தற்போது நீர் தேங்கியிருப்பதைக் காணமுடிகிறது.

மழைக்கு தான் நன்றி கூற வேண்டுமென தெரிவித்த அங்குள்ள ஒருவர், ஏரி சார் நடவடிக்கைகள் மீண்டும் பரபரப்பாகியிருப்பதாகச் சொன்னார்.

தைப்பிங் ஏரியில் படகோட்டும் நடவடிக்கைகள் வறட்சி காலத்தின் போது சுமார் 40 விழுக்காடு சரிந்திருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

இவ்வேளையில், Bukit Merah Laketown Resort உல்லாசத்தலத்தின் நிர்வாகி டனேஷ் குமார் கூறுகையில், அங்குள்ள நீர் விளையாட்டுப் பூங்கா வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.

எனினும், Pulau Orang Utan-னில் நீர் மட்டம் இன்னும் பழையபடி மீட்சிப் பெறாததால் அங்கு அனைத்து நடவடிக்கைகளும் தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டதாகச் சொன்னார்.

இந்த ஓரிரு வாரங்களில் மழை தொடர்ந்து பெய்தால், அதனை மீண்டும் திறக்க முடியுமென்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!