சிங்கப்பூர், பிப் 28- சிங்கப்பூரில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக அந்நாட்டின் முக்கிய சில பகுதிகளில் திடீர் வெள்ளம் சூழ்ந்தது.
Ubi Avenue 3, Eunos Link, Pan Island உள்ளிட்ட முக்கிய சாலைகளில் நேற்று மாலை திடீர் வெள்ளம் ஏற்பட்டதால், வாகனமோட்டிகளுக்கு உதவவும் போக்குவரத்தை சீராக்கவும் அவசர உதவிக்குழு போக்குவரத்து போலீசுடன் களத்தில் இறங்கி செயல்பட்டதாக சிங்கப்பூர் நீர் நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, Bedok கால்வாய், Jalan Nipah, Bedok சாலை, Bedok Garden மற்றும் Jalan Chempaka Kuning பகுதிகளிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.