Latestமலேசியா

தொட்டியில் தலை சிக்கி 15 மாத குழந்தை உயிரிழந்தது

சிரம்பான், பிப் 23 – Bandar Sri Sendayan, Taman Nusari Aman 2 இல் உள்ள குழந்தை பராமரிப்பு நிலையத்தில் தொட்டியில் தலை சிக்கி 15 மாத குழந்தை ஒன்று உயிரிழந்தது. அதற்கு முன்னதாக குழந்தை பராமரிப்பாளர் நண்பகல் மணி 12.30 அளவில் அக்குழந்தைக்கு பால் கொடுத்து அறையில் உள்ள தொட்டியில் தூங்க வைத்துள்ளார்.

ஒரு மணி நேரம் கழித்து அந்த அறைக்கு சென்று பார்த்தபோது தொட்டியில் அக்குழந்தையின் தலை சிக்கிக் கிடந்துள்ளது. இதனையடுத்து, அந்த குழந்தையை சுவாசிக்க வைப்பதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி பலன் அளிக்காததால் உடனடியாக அருகேயுள்ள Sendayan சுகாதார கிளினிக்கிற்கு கொண்டுச் சென்றுள்ளார்.

எனினும், குழந்தையை பரிசோதித்த மருத்துவர் அக்குழந்தை இறந்ததை உறுதிப்படுத்தியதாக சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Nanda Maarof கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!