கோலாலம்பூர், பிப் 24 – சிரம்பான் பண்டார் ஸ்ரீ சென்டாயானிலுள்ள குழந்தை பராமரிக்கும் நிலையத்தில் தொட்டிலில் கழுத்து சிக்கி 15 மாத பெண் குழந்தை ஒன்று இறந்ததைத் தொடர்ந்து வாக்குமூலம் பெறுவதற்காக 18 தனிப்பட்ட நபர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
குழந்தை பராமரிப்பாளர் மற்றும் அந்த பராமரிப்பு மையத்திற்கு குழந்தைகளை அனுப்பி வைக்கும் பெற்றோர்களும் அவர்களில் அடங்குவர் என சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் Nanda Maarof தெரிவித்தார்.
அந்த குழந்தையின் சவ பரிசோதனை அறிக்கையில் கழுத்து இறுகியதால் அக்குழந்தை இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக Nanda Maarof தெரிவித்தார்.