
அம்பாங், மார்ச் 14 – தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியை பார்ப்பது என்பது தொடர்பில் மகன் – தந்தைக்கு இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில், தந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
அந்த சம்பவம் அம்பாங், தாமான் புக்கிட் தெராத்தாய் (Taman Bukit Teratai ) வீடமைப்பு பகுதியில் நிகழ்ந்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஃபாருக் எஷாக் ( Farouk Eshak ) தெரிவித்தார்.
கடும் வாக்குவாதத்தின் போது, 41 வயது மகன் ஆத்திரத்தில் 74 வயதான தனது தந்தையை நோக்கி தொலைக்காட்சியின் ரிமோட் ( Remote) கருவியை தூக்கி வீசியதாக, அவர் குறிப்பிட்டார்.
அச்சம்பவத்தில் தலையில் காயமடைந்த அந்த முதியவர் அம்பாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வேளை, அவரது மகனை அதே நாளன்று வீட்டில் கைது செய்யப்பட்டதாக Farouk Eshak கூறினார்.