
பாகிஸ்தான், செப் 30 – பாகிஸ்தானில் தொலைக்காட்சி நேரலை விவாத நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இரு பாகிஸ்தானிய அரசியல் தலைவர்கள், வாய்ச்சண்டை முற்றி, பின்னர் தலைமுடியை இழுத்து அடிதடி சண்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்த நேரலைக் காட்சிகள் வைரலாகி பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
பாகிஸ்தான் Tehreek-e-Insaaf கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞரான ஷேர் அப்சால் மர்வாட் எனும் அரசியல்வாதியும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் – நவாஸ் கட்சியைச் சேர்ந்த அப்னானுல்லா கான் எனும் அரசியல்வாதியும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் விவாத நிகழ்ச்சியின் கலந்துக் கொண்டிருந்தனர்.
அப்போது கருத்து வேறுபாடு காரணமாக வாய்ச்சண்டை மூண்டுள்ளது. திடீரென அவர்களில் ஒருவர் எழுந்து மற்றொருவரை அறைய நிலைமை கட்டுபாட்டை மீறியது.
அவர்களை சமாதானம் செய்ய வந்த நிகழ்ச்சி நெறியாளரையும் அவர்கள் தள்ளிவிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வலைத்தளவாசிகள் கிண்டலாக சமூக வலைத்தளத்தில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.