Latestஉலகம்சினிமா

தொலைக்காட்சி படப்பிடிப்பின்போது நடிகை தூக்கில் தொங்கினார்; கதாநாயகன் கைது

மும்பாய், டிச 26 – மும்பையில் பிரபல Bollywood மற்றும் தொலைக்காட்சி நடிகையான 20 வயது Tunisha Sharma ( துனிஷா சர்மா) படப்பிடிப்பு தளத்தில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தொடர்பில் சக நடிகர் Sheezan Mohammad Khan கைது செய்யப்பட்டார். படப்பிடிப்பின்போது மேக்காப் அறைக்கு சென்ற நடிகை Tunisha Sharma வெகு நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனை தொடர்ந்து அந்த அறைக் கதவை உடைத்து பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். AliBaba Dastaan E- Kabul தொடரில் துனிஷா கதாநாயகியாக நடித்து வந்தார், அவர் ஏற்கனவே சில இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை Tunisha வும் அந்த தொலைக்கட்சி தொடரில் கதாநாயகனான நடித்து வந்த நடிகர் Sheezan னும் காதலித்து வந்ததோடு 15 நாட்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது. நடிகை Tunisha ஏமாற்றம் மற்றும் விரக்தியில் இருந்து வந்தாகவும் அவர் தூக்கில் தொங்கி இறப்பதற்கு தூண்டிய அல்லது உடந்தையாக இருந்த குற்றத்திற்காக நடிகர் Sheezan கைது செய்யப்பட்டதாக மும்பாய் போலீசார் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!