
பாங்கி, ஜூன் 15 – பாங்கியில் Taman Industri Selaman அச்சக தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வங்காளதேச தொழிலாளர்கள் மரணம் அடைந்தனர். அந்த சம்பவத்தில் மேலும் நான்கு தொழிலாளர்கள் உயிர் தப்பினர். விடியற்காலை மணி 4.14 அளவில் இந்த தீவிபத்து குறித்த தகவலை பெற்றதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குனர் Wan Mohamad Razali wan Ismail தெரிவித்தார். மறு சுழற்சிக்கான காகிதங்களை வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலை கட்டிடத்திற்குள் தீபிடித்ததாக அவர் கூறினார். அந்த தீ விபத்தின்போது அங்கு ஆறு வங்காளதேச தொழிலாளர்கள் இருந்தனர். அந்த தொழிற்சாலையில் காற்று வெயேறும் இடம் இல்லாததால் மோசமான கரும்புகையை சுவாசித்ததால் அவர்களில் இருவர் மாண்டனர் என Wan Mohamad Razali கூறினார்.