
பந்தாய் ரெமிஸ் , ஜன 30 – பந்தாய் ரெமிஸ், ஜாலான் புருவாஸில் இன்று காலையில் புரோடுவா கெலிசா காரும், தொழிலாளர்களை ஏற்றிச் செல்லும் வேன் ஒன்றும் மோதிக் கொண்ட சம்பவத்தில் இருவர் மாண்டதோடு மேலும் இருவர் காயம் அடைந்தனர். அந்த விபத்தில் 77 வயதுடைய ஆடவரும் 64 வயதுடைய பெண்மணியும் மாண்டதாக பந்தாய் ரெமிஸ் தீயணைப்பு நிலையத்தின் தலைவைர் Akmal Azizi Elias தெரிவித்தார். காரில் சிக்கிக்கொண்ட அவர்கள் இருவரும் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு வெளியே மீட்கப்பட்டனர். விபத்து நிகழ்ந்த இடத்திலேயே அவ்விருவரும் மரணம் அடைந்ததை மருத்துவ உதவியாளர்கள் உறுதிப்படுத்தினர். . இந்த விபத்தில் 70 வயதுடைய ஆடவரும் 53 வயதுடைய மற்றொரு பெண்ணும் காயம் அடைந்தனர். .