பட்டர்வெர்த், பிப் 12 – பிறை தொழில்மயப் பகுதியில் தொழிற்சாலை பஸ்சும் டிராய்லர் லோரியும் மோதிக்கொண்ட விபத்தில் அவ்விரு வாகனங்களின் ஓட்டுனர்கள் கடுமையாக காயம் அடைந்தனர். அந்த விபத்தில் தொழிற்சாலை பஸ்ஸில் இருந்த 15 வெளிநாட்டு தொழிலாளர்களும் சொற்ப நிலையில் காயம் அடைந்தனர். இன்றிரவு மணி 7.15 அளவில் அந்த விபத்து நிகழ்ந்தது. அந்த விபத்துக்குப் பின் பஸ் கவிழ்ந்தது. பஸ் ஓட்டுநரும் லோரி ஓட்டுனரும் டிரைவர் இருக்கையில் நசுங்கிக் கிடந்தனர். தீயணைப்பு வீரர்கள் அவர்களை மீட்டு செபராங் ஜெயா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக பினாங்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவின் அதிகாரி Fakahrurazi Md Rejab கூறினார்.
Related Articles
Check Also
Close