Latestமலேசியா

தொழிற்சாலை முழுவதும் கோவிட் பரவியது; 21 பேருக்கு தொற்று

மெர்லிமாவ், பிப் 14 – மலாக்கா, மெர்லிமாவில் உள்ள தொழிற்பேட்டையில் , கண்ணாடி வில்லையைத் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 21 தொழிலாளர்களுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இம்மாதம் பிப்ரவரி 5-ஆம் தேதி முதல், தொழிற்சாலை தரப்பினர் மேற்கொண்ட கோவிட் பரிசோதனையில் , அவர்களுக்கு தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக, மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Dr. Muhamad Akmal Saleh தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் 333 தொழிலாளர்கள் வேலை செய்யும் நிலையில், அவர்களில் 80 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். இந்நிலையில் கோவிட் பாதிப்புக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் உள்நாட்டவர்கள் என அவர் குறிப்பிட்டார் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!