
கோலாலம்பூர், மார்ச் 13 – தனது தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு, சைம் டார்பி ( Sime Darby ) நிறுவனம் குறைந்தபட்சம் 3,000 ரிங்கிட் மாத சம்பளத்தை வழங்க தொடங்கியுள்ளது.
அதிகமான உள்நாட்டவர்கள் தோட்டத் தொழில் துறையில் வேலை செய்வதைக் கவரும் நோக்கம் , அந்த அதிக சம்பளம் வழங்கப்படுவதாக அந்நிறுவனம் கூறியது. இதுவரை 400 தொழிலாளர்களுக்கு சைம் டார்பி அந்த சம்பளத் தொகையை வழங்கி வருகிறது.
அத்துடன், தோட்டத் தொழில்துறையில், நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதை அடுத்து, அத்தொழில்நுட்பத்தை கற்ற திறன் பெற்ற தொழிலாளர்களுக்கு அந்த சம்பளம் வழங்கப்படுவதாக, அந்நிறுவனம் குறிப்பிட்டது.