
கோலாலம்பூர், செப்.15 – தொழிலாளர் சட்டங்களை மீறியதற்காக இந்த ஆண்டு இதுவரை 400 நிறுவனங்கள் மீது மலேசியா நடவடிக்கை எடுத்துள்ளதாக மனிதவள அமைச்சர் வி.சிவகுமாரை மேற்கோள் காட்டி பெர்னாமா தெரிவித்துள்ளது. தொழிலாளர் துறை 272 முதலாளிகளுக்கு எதிராக மொத்தம் RM2.17 மில்லியன் அபராதம் விதித்தது. அதே நேரத்தில் நீதிமன்றங்கள் 128 முதலாளிகளுக்கு RM242,000 அபராதம் விதித்துள்ளது என்று சிவக்குமார் தெரிவித்தார். தொழிலாளர் விதிமீறல்களில் சட்டவிரோத சம்பள வெட்டும் அடங்கும். எனினும் நிறுவனங்களின் பெயர்கள் மற்றும் தொழிலாளர் குற்றங்கள் குறித்த விவரங்களை அமைச்சர் வெளியிடவில்லை.