தொழிலாளர் சங்க சட்டத்தில் திருத்தம்! மலேசிய சட்டங்கள் மறுமலர்ச்சி இயக்கங்கள் வரவேற்பு

கோலாலம்பூர், மார்ச் 9 – நாட்டில் 2022 ஆம் ஆண்டுக்கான தொழிலாளர் சங்க சட்டத்தில் திருத்தம் செய்யப்படுவதை மலேசிய சட்டங்கள் மறுமலர்ச்சி இயக்கங்கள் வரவேற்பதாக இந்த இயக்கங்களின் கூட்டுத் தலைவர்களான என். கோபாலகிருஷ்ணன் மற்றும் ஐரின் சேவியர் தெரிவித்தனர். தொழிலாளர்கள் சங்கத்தை கட்டுப் படுத்தும் இயக்குநரின் அதிகாரத்தை குறைத்து தொழிலாளர் சங்கங்கள் சுதந்திரமாக செயல்பட இது வழி வகுக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் முன்னாள் தலைமை செயலாளரான
என். கோபாலகிருஷ்ணன் தலைமையில் 7 தொழிற்சங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் மனித வள அமைச்சர் வி . சிவகுமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நாட்டில் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் உரிமைகள், நலன்கள் காக்க மனித வள அமைச்சர் சிவகுமார் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு நாங்கள் முழு ஆதரவு வழங்குவோம் என்று கோபாலகிருஷ்ணன் குறிப்பிட்டார்.