
கோலாலம்பூர், மார்ச் 8 – பாதுகாப்பு கடப்பிதழ் திட்டத்தில் பங்குபெறாமல் இருக்கும் முதலாளிகளும், தொழில்துறையினரும், பணியிடத்தில் விபத்துகளைக் குறைக்க அந்த கடப்பிதழை பெறும் முயற்சியை எடுக்குமாறு மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் கேட்டுக் கொண்டார்.
தற்போதைக்கு முதலாளிகள் அந்த கடப்பிதழை வைத்திருப்பதை கட்டாயமாக்க தமதமைச்சு எண்ணம் கொண்டிருக்கவில்லை. இருப்பினும் அதை பெற்றிருப்பைதை ஊக்குவிக்கிறது.
அதையடுத்து, NIOSH -பணியிட பாதுகாப்பு சுகாதார அமைப்பு , அந்த கடப்பிதழ் குறித்த விழிப்புணர்வை முதலாளிகள் மத்தியில் ஏற்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பணியிடத்தில் , தொழிலாளர்கள் மத்தியில் பாதுகாப்பு – சுகாதார அம்சம் தொடர்பான விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக 2,000 -ஆம் ஆண்டில் NIOSH பாதுகாப்பு கடப்பிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.