செப்பாங், அக்டோபர்-17, அதிகாரிகள் கண்ணில் படாதவாறு தொழில்துறை இயந்திரத்தில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்ட 207 கிலோ கிராம் metamfetamina வகைப் போதைப்பொருள் KLIA-வில் சிக்கியுள்ளது.
அவற்றின் மொத்த மதிப்பு 66 லட்சம் ரிங்கிட்டாகும்.
அமெரிக்க கண்டத்திலிருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டதாக நம்பப்படும் அப்போதைப்பொருள், வளைகுடா நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படுவதற்காக இங்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சவூதி அரேபிய உள்துறை அமைச்சின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு வழங்கிய உளவுத் தகவல், KLIA-வில் அப்போதைப்பொருளைக் கைப்பற்ற பெரும் உதவியாக இருந்ததாக சுங்கத் துறை இயக்குநர் அனிஸ் ரிசானா மொஹமட் சைனுடின் (Anis Rizana Mohd Zainudin) தெரிவித்தார்.
இவ்வேளையில், அக்டோபர் 10-ஆம் தேதி அண்டை நாட்டிலிருந்து வந்திறங்கிய இரு உள்ளூர் ஆடவர்களின் பயணப் பெட்டியில் 3 கிலோ கிராம் எடையிலான கஞ்சா வகை போதைப்பொருள் பிடிபட்டது.
1 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான அப்பொருள் கிள்ளான் பள்ளத்தாக்கு சந்தைக்காகக் கடத்தி கொண்டு வரப்பட்டதாகும்.