Latestஉலகம்

தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட டோனல்ட் டிரம்ப் – இலோன் மஸ்ட் நேரலை 10 லட்சம் பயனர்களை எட்டியது

வாஷிங்டன், ஆகஸ்ட்-13, அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் டோனல்ட் டிரம்ப்பை, X தளத்தில் நேரலையாக கோடீஸ்வர தொழிலதிபர் இலோன் மஸ்க் (Elon Musk) பேட்டியெடுக்கும் நிகழ்ச்சி ஒருவழியாக நடைபெற்றுள்ளது.

ஏராளமான X தளப் பயனர்களால் நேரலையில் பங்கேற்க முடியாத அளவுக்கு ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாற்றால், முன்னதாக நெடு நேரமாக அது தாமதமானது.

எனினும் அனைத்தும் சீர் செய்யப்பட்டு 40 நிமிடங்கள் தாமதமாக அமெரிக்க நேரப்படி திங்கட்கிழமை இரவு அப்பேட்டி தொடங்கியது.

அத்தாமதத்திற்க்கு, DDoS எனப்படும் ஒருவகை இணையச் சேவைப் பாதிப்பு தாக்குதலை மஸ்க் காரணமாகக் கூறினார்; ஆனால் அவரின் அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை.

டிரம்பை, இலோஸ் மஸ்க் பேட்டி எடுப்பதை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் செவிமெடுத்ததாக, X தளத்தின் கணக்கெடுப்பு பட்டன் தெரிவித்தது.

அப்பேட்டியைக் கேட்பதற்காக லட்சக்கணக்கில் பயனர்கள் குவிந்ததைக் குறிக்கும் விதமாக, ‘சாதனைக்காகப் பாராட்டுகள்’ என டிரம்ப், மஸ்கை வாழ்த்தினார்.

உலகின் பெரும் கோடீஸ்வரரான மஸ்க், ஜூலை 13-ஆம் தேதி டிரம்ப் கொலை முயற்சியிலிருந்து தப்பித்தது முதல் அவருக்கு வெளிப்படையாக ஆதரவளிக்கத் தொடங்கினார்.

இதே மஸ்க், 2020-ல் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடனை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!