பெய்ஜிங், பிப் 10 – சீனாவின் தொழில்நுட்ப நிறுவனமொன்றின் இளம் வயது ஊழியர் ஒருவரின் மரணம், அந்நாட்டில் தொழிற்துறைகளில் கடைப்பிடிக்கப்படும் கூடுதல் நேர வேலை கலாச்சாரம் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியிருக்கின்றது.
BiliBili எனப்படும் குறுகிய காணொளிகளை வெளியிடும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த 25 வயதான ஊழியர், ஒரு வார நீண்ட விடுமுறைக்கு தொடர்ச்சியாக வேலை செய்து வந்த பின்னர் , மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு இறந்திருக்கின்றார்.
அந்த சம்பவத்தை அடுத்து, அந்நாட்டில் தொழில்நுட்ப நிறுவனங்களில் கடைப்பிடிக்கப்படும் ‘996’ எனப்படும் வேலை நேர கலாச்சார முறை ஆரோக்கியமானதா என விவாதங்கள் அதிகரித்துள்ளன. அந்த முறையின் கீழ் ஊழியர் நாளொன்றுக்கு 12 மணி நேரமும், வாரத்திற்கு 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும். அந்த வேலை கலாச்சார முறையை Alibaba நிறுவன தோற்றுனர் Jack Ma போன்ற தொழில்முனைவர்களும் பின்பற்றியிருக்கின்றனர்.