
பேங்கோக்கிலிருந்து சிங்கப்பூருக்கு பயணமான, ஸ்கூட் (Scoot) விமானம் ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக, மீண்டும் தாய்லாந்துக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
உள்நாட்டு நேரப்படி, மாலை மணி 3.56-க்கு பேங்கோக்கிலிருந்து புறப்பட்டு, இரவு மணி 7.15 வாக்கில் சிங்கப்பூர் சென்றடைந்திருக்க வேண்டிய அந்த விமானத்தின் ‘கேபினில்’ புகை சூழ்ந்திருக்கும் படங்களை, The Straits Times வெளியிட்டுள்ளது.
சம்பவத்தின் போது, விமானத்தில் இருந்த 230 பயணிகளுக்கும், எட்டு பணியாளர்களுக்கும் இருந்தனர்.
பாதுகாப்பு கருதி, மீண்டும் பேங்கோக்கிற்கு திரும்ப முடிவுச் செய்யப்பட்டதாக, சிங்கப்பூர் மலிவு விலை விமான சேவை நிறுவனமான ஸ்கூட்டின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மாலை மணி 5.09 வாக்கில், பேங்கோக்கில் பாதுகாப்பாக தரையிறங்கிய அவ்விமானத்தை பழுது பார்க்கும் பணிகள் நிறைவடைந்ததும், இரவு மணி 7.27 வாக்கில் அது மீண்டும் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு, இரவு மணி 10.26 வாக்கில் சிங்கப்பூர் சென்றடைந்தது.