கோலாலம்பூர், மார்ச் 6 – TVET தொழில்நுப்ட- தொழில் திறன் பயிற்சி திட்டம் தொடர்பில் புதிய கொள்கையை வரையும்படி கல்வியமைச்சு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
TVET இரண்டாம் பட்சமான கல்வி அல்லது கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கே தொழிற்கல்வி எனும் கண்ணோட்டத்தைக் களைவதற்காக, அத்திட்டத்தை தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படுமென பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
மேம்பாடடைந்த நாடுகளில் TVET கல்வி, மாணவர்களின் சிறு வயது முதலே கற்பிக்கப்படுகிறது. ஆனால் மலேசியாவில் மூன்றாம் படிவத்திற்குப் பின்னரே, நான்காம் அல்லது ஐந்தாம் படிவத்திலே தொழிற்கல்வியத் தேர்ந்தெடுத்து படிப்பதற்கான தேர்வு வழங்கப்படுகிறது.
எனவே முதலாம் படிவத்திலே TVET -கல்வியை தேர்ந்தெடுத்து படிப்பதற்கான பரிந்துரை புதிய கொள்கையில் சேர்த்துக் கொள்ளப்படலாமென பிரதமர் கூறினார்.
இவ்வேளையில், நாட்டின் சில பல்கலைக்கழகங்கள் மேற்கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களின் TVET அ ல்லது தொழிற்பயிற்சி மையங்களின் சான்றிதழையும் ஏற்றுக் கொள்கின்றன. அதனால், பெற்றோர் தங்களது பிள்ளைகள் தொழிற்கல்வியை எடுத்துப் படிப்பதில் தயக்கம் காட்ட வேண்டியதில்லை என பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், 2020 – இல் வேலை சந்தையில் TVET முடித்த மாணவர்களின் வேலை வாய்ப்பு விகிதம் 87 விழுக்காடாகும். பட்டதாரி மாணவர்களின் வேலை வாய்ப்பு விகிதம் 84.4 விழுக்காடாக இருந்ததை டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சுட்டிக் காட்டினார்.
முன்னதாக பிரதமர் பொந்தியானில் Kolej komuniti சமூக கல்லூரியைத் தொடக்கி வைத்தார்.