ஜோகூர் பாரு, பிப் 22 – சுய தொழில் செய்வோருக்கான சொக்சோ பங்களிப்பு, தொழில் முனைவோர்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து தெக்குன் நெஷனல், 25,000 தொழில் முனைவர்களை சொக்சோவில் பதிவு செய்ய இலக்கு கொண்டிருப்பதாக, கூட்டுறவு தொழில்முனைவர் மேம்பாட்டு அமைச்சர் Tan Sri Noh Omar குறிப்பிட்டார்.
மனித வள அமைச்சுடன் இணைந்து , தொழில்முனைவர்கள் மத்தியில் சொக்சோ பங்களிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் , Tan Sri Noh Omar அதனைத் தெரிவித்தார்.