Latestமலேசியா

தோக்யோ ஒலிம்பிக் போட்டி ரத்தா? – ஜப்பான் மறுப்பு

தோக்யோ, ஜன 22- கோவிட்-19 தொற்று பரவலைத் தொடர்ந்து ஜப்பானிய அமைச்சரவையினால் ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு அரசாங்கம் மறுத்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை, அமைச்சரவை ரகசிய கூட்டம் ஒன்றை நடத்தி ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் 2032- ஆம் ஆண்டு அப்போட்டியை நடத்த முன்வந்ததாக ஜப்பானிய அரசாங்கத்திற்கு அனுக்கமான தரப்பை மேற்கொள் காட்டி உள்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், அத்தகவல் உண்மையில்லை என ஜப்பானிய அமைச்சரவையின் துணை செயலாளர் மனாபு சகாய் (Manabu Sakai) கூறினார். தொற்றுநோய் காரணமாக 2020 ஒலிம்பிக் போட்டி ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்படும் என அனைத்துலக ஒலிம்பிக் குழு மார்ச் மாத இறுதியில் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இப்போட்டி இவ்வாண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைப்பெறும் என திட்டமிடபட்டிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!