Latestமலேசியா

தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து செம்பனை திருடினர்; ஐவர் கைது

லுமுட், பிப் 12 – ஆயர் தாவாரிலுள்ள தோட்டத்தில் அத்துமீறி நுழைந்து செம்பனை திருடியதன் தொடர்பில் ஐந்து ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர். Manjung வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று வெவ்வேறு சோதனை நடவடிக்கையின்போது அவர்கள் கைது செய்யப்பட்டதை Manjung மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் Nor Omar Sappi உறுதிப்படுத்தினார். முதலில் 35 மற்றும் 39 வயதுடைய இரண்டு ஆடவர்கள் செம்பனையை திருடிக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டனர். தப்பியோடிய இதர மூவர் பிறகு பிடிபட்டனர். மேலும் ஒரு லோரி, செம்பனை குலைகளை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டட மூன்று கத்திகள் மற்றும் 39 செம்பனை குலைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக Nor Omar Sappi தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!