கர்க்கிவ், பிப் 23 – ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தும் சாத்தியம் இருப்பதால் அதனை எதிர்கொள்வதற்காக உக்ரைய்ன் மாணவர்களுக்கு தோட்டா துளைக்காத அங்கியை எப்படி பயன்படுத்துவது, போருக்குள்ளான பகுதியிலிருந்து விரைந்து வெளியேறுவது மற்றும் முதலுதவி வழங்குவது போன்ற பயிற்சிகள் வழங்கப்பட்டன.
உக்ரைய்ன் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கர்க்கிவ் நகரில் மாணவர்களுக்கு போர் நெருக்கடி கால பயிற்சிகள் வழங்கப்பட்டது. ரஷ்ய எல்லையிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கர்க்கிவ் நகரில் உக்ரைய்ன் பீரங்கி வண்டிகள், போர் விமானங்கள் மற்றும் ராணுவத்தின் முக்கிய நிலைகள் உள்ளன.
ரஷ்யத் தாக்குதலுக்கு முதலில் கர்க்கிவ் நகர்தான் இலக்காக இருக்கும் என உக்ரைய்ன் அதிபர் Volodymyr Zelenski கோடிகாட்டியுள்ளார். போரின்போது காயம் அடைவதை தவிர்ப்பற்கான பயிற்சிகளும் மாணவர்களுக்கும் சிறுவர்களுக்கும் வழங்கப்பட்டது.