
கோலாலம்பூர், ஜன 12 – முன்னாள் சட்டத் துறை தலைவர் Tommy Thomas எழுதிய My Story : Justice In the Wilderness எனும் புத்தக்கத்தில் குறிப்பிடபட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க, அரச விசாரணை ஆணையத்தை அமைக்க அரசாங்கம் இணங்கியிருக்கின்றது.
அவரது குற்றச்சாட்டுகளில் உள்ள உண்மையை கண்டறியவும், சட்டத் துறையை சீர்திருத்தக் கூடிய பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன் வைக்கவும் , அந்த அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவதாக, சட்ட விவகார அமைச்சர் Datuk Seri Azalina Othman தெரிவித்தார்.
அதே வேளை, எந்தவொரு தரப்பின் தவற்றினைக் கண்டுபிடிக்கும் நோக்கத்தை அந்த விசாரணை ஆணையம் கொண்டிருக்கவில்லை எனவும் அவர் தெளிவுப்படுத்தினார்.