Latestஉலகம்

தோழியைக் கழுத்தறுத்து கொலை செய்த மாணவன்; அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தார்

புதுடில்லி, பிப் 14- இந்தியா, குஜராத் மாநிலத்தில் தன் பள்ளிக்கால சிநேகிதியை அவளின் குடும்பத்தார் முன்னிலையிலேயே கழுத்தறுத்துக் கொன்ற கல்லூரி மாணவனின் செயல் அங்குள்ள பொதுமக்களை மட்டுமல்லாது வலைத்தளவாசிகளையும் அதிர்ச்சியில் உறையச் செய்துள்ளது.

Surat, Pasodara பகுதியில் சம்பந்தப்பட்ட 22 வயதான Fenil Goyan எனும் அந்த மாணவன் தனது பால்ய சிநேகிதியான Grishma Vekariya வின் கழுத்தை கத்தியால் அறுப்பதை அவளின் குடும்பத்தார் பதிவு செய்தனர்.

கொலையுண்ட Grishma தரையில் கிடக்க, Fenil Goyan ஒரு வகை தூளை வாயில் கொட்டியபடி, அதே கத்தியால் தன் கையையும் அறுத்து தற்கொலைக்கு முயற்சித்த காட்சியும் அந்தக் காணொளியில் இடம்பெற்றிருந்தது.

இதனையடுத்து, கையில் வெட்டுக் காயத்துடன் Fenil Goyan தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!