Latestமலேசியா

நகைச்சுவை கலைஞர் உணவு வினியோகிப்பாளரை தாக்கும் காணொளி வைரலானது

ஷா அலாம், மே 5 –  உணவு வினியோகிப்பாளர் ஒருவரை பிரபல  நகைச்சுவைக் கலைஞர்   தாக்கும்  24 வினாடிகளைக் கொண்ட காணொளி  சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.  சாலை ஓரத்தில் உணவு வினியோகிப்பாளரை அந்த நகைசுவை கலைஞர் தாக்கியுள்ள காணொணியை   காரில் இருந்த ஒருவர் பதிவு செய்துள்ளாளர்  என  தெரிகிறது. உணவு வினியோகிப்பாளரின் கழுத்தை பிடித்து இழுத்து பிறகு அவரது  தலையில் அந்த கலைஞர் அடிக்கிறார். அதே வேளையில் அந்த

கலைஞரை பிடித்து இழுத்து அவரை பொதுமக்களில் சிலர்  அமைதிப்படுத்துகின்றனர். அதன் பிறகும்கூட அந்த  பிரபல கலைஞர்  மீன்டும்  உணவு வினியோகிப்பாளரை எச்சரிக்கிறார். கெடாவைச் சேர்ந்த அந்த கலைஞர்  இதற்கு முன்  கடந்த  2019ஆம் ஆண்டு  ஏப்ரல்  6ஆம் தேதி  நீலாய் நெகிரி செம்பிலானில்  வீடமைப்புப்  பகுதி ஒன்றில் பாதுகவாலராக  இருந்த முதியவரை மிரட்டியுள்ளார். அந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து  சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு   2,000 ரிங்கிட அபராதம்  விதித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!