Latestசினிமா

நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கோவிட் தொற்று – மருத்துவமனையில் அனுமதி

சென்னை, ஏப் 13 – நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்காக நடிகர் செந்தில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதே சமயத்தில் அவரது மனைவி, மகன் மற்றும் மருமகள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது உடல்நிலை முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!