
சிரம்பான், ஜன 25 – நெகிரி செம்பிலான், சிரம்பானில், வீட்டில் தனியாக விட்டுச் செல்லப்பட்ட இந்தோனேசியப் பணிப் பெண் ஒருவர், 14 ஆயிரம் ரிங்கிட் பெருமானமுள்ள நகைகள் மற்றும் பணத்துடன் தப்பி ஓடிய சம்பவம் குறித்து போலீஸ் புகார் செய்யப்பட்டுள்ளது.
வேலைக்கு அமர்த்தப்பட்டு மூன்று மாதங்களே ஆகும் அந்த 40 வயது மதிக்கத்தக்க பெண், இம்மாதம் 22-ஆம் தேதி, வீட்டின் பின் கதவு வழியே தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
வீட்டு உரிமையாளர்கள் உறவினரின் திருமணத்திற்கு சென்றபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.