
கோலாலம்பூர், மே 11 – நச்சு அரசியலை புறக்கணித்துவிட்டு அம்னோவை ஆக்கப்பூர்வமான கட்சியாக உருவாக்குதற்கு அதன் உறுப்பினர்கள் முன்வரும்படி அக்கட்சியின் தலைவரான அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார். அம்னோவின் எதிரிகள் கட்சிக்கு எதிரான பிரச்சாரங்களை தொடர்ந்து பரப்பி வருகின்றனர். ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக அம்னோ இருப்பதை அதன் எதிரிகள் விரும்பாததே இதற்கு காரணம் என ஸாஹிட் கூறினார். கட்சியின் உணர்வுக்கு அம்னோ உறுப்பினர்கள் புத்துயீருட்டுவதோடு அதன் வரலாற்தை உணர்ந்து மீண்டும் எழுச்சியுடன் செயல்படுவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கும்படி அம்னோவின் 77ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்தை தொடக்கிவைத்தபோது ஸாஹிட் ஹமிடி வலியுறுத்தினார். புதிய அரசியல் நிர்வாகத்திற்கு ஏற்ப விவேகமான மற்றும் புத்துணர்வுடன் அம்னோ செயல்பட வேண்டும். அந்த நோக்கத்திற்கு ஏற்ப தனிப்பட்ட நலன்களை புறக்கணித்துவிட்டு கட்சியன் நலன்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி அம்னோ உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.