Latestஉலகம்மலேசியா

நஜீப்பின் நீதிமன்ற வழக்குகளில் தலையிட மறுத்ததால் ஆதரவை அவர் மீட்டுக்கொண்டார் – அன்வார் விளக்கம்

கோலாலம்பூர், ஜூன் 30 – 2020-ஆம் ஆண்டு தாம் பிரதமராக வருவதற்கு அம்னோவைச் சேர்ந்த 15 பேர் உட்பட 120 எம்.பிக்களின் ஆதரவை பெற்றிருந்தபோதிலும் நஜீப் ரசாக்கின் வழக்கில் தலையிட மறுத்துவிட்டதால் அந்த எண்ணிக்கை குறைந்ததை எதிர்க்கட்சி தலைவரான டத்தோஸ்ரீ அன்வார் இன்று அம்பலப்படுத்தினார். அதிகாரத்திற்கு வருவதற்காக லஞ்ச ஊழல் வழக்குகளை கொண்டவர்களுடன் கூட இணைந்து பணியாற்றுவதற்கு பக்காத்தான் ஆர்வமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை என்பதை இதன்வழி தாம் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக போட்டிக்சன் எம்.பியுமான அன்வார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நஜீப்பும் மற்றும் அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடியும் தமக்கு ஆதரவு வழங்க முன்வந்த எம்.பிக்களில் அடங்குவர்.

120 பேரின் ஆதரவை பெற்றிருந்தாலும் நஜீப் மற்றும் ஸாஹிட்டின் சத்திய பிரமான பிரகடனத்தை ஏற்பதில்லை என்ற கொள்கையில் பக்காத்தான் ஹராப்பான் உறுதியாக இருந்தது. அவர்கள் இருவர் எனக்கு ஆதரவு தராவிட்டாலும் 118 எம்.பிக்களின் ஆதரவு இருந்தது. இந்த வேளையில்தான் நான் பிரதமராக வந்தால் எனது அதிகாரத்தை பயன்படுத்தி நஜீப்பின் வழக்கு தொடராது என்பதற்கு உறுதியளிக்கும்படி கேட்டனர். எனக்கு போதுமான ஆதரவு இருந்ததால் நான் பிரதமராகும் வாய்ப்பு தெளிவாக இருந்தது. எனவே நமது நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிட தாம் விரும்பவில்லை என கூறிவிட்டதாக அன்வார் விளக்கினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!