Latestமலேசியா

நஜீப்பின் மருத்துவ அறிக்கை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்படும்

கோலாலம்பூர், செப் 22- நஜீப் ரசாக் மீதான மருத்துவ பரிசோதனை, சிகிச்சை மற்றும் கண்காணிப்பு தொடர்பான தகவல்கைளைக் கொண்ட மருத்துவ அறிக்கை முழுமையடைந்துள்ளது. அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு தயாராய் இருப்பதாக சுகாதார தலைமை இயக்குனர் டாக்டர் Noor Hisham Abdullah தெரிவித்தார். எனினும் 1971-ஆம் ஆண்டின் மருத்துவ சட்டத்தின் கீழ் நோயாளிகளின் ரகசியம் தொர்பான நன்னெறியை பாதுகாக்கும் பொறுப்பையும் கடப்பாட்டையும் சுகாதார அமைச்சு கொண்டுள்ளதாக தமது முகநூலில் வெளியிட்ட அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிகிச்சை மற்றும் கண்காணிப்புக்காக கடந்த திங்கட்கிழமை முதல் செராசிலுள்ள HRC மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைத்துறை நேற்று தெரிவித்திருந்தது. HRC அல்லது கோலாலம்பூர் பொது மருத்துவமனையின் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சைக்குப் பின்னர் நஜீப் வெளியேறுவதற்கு அனுமதி வழங்கிய பின் அவர் சிறைத் தண்டனையை அனுபவிப்பதற்காக காஜாங் சிறைச் சாலைக்கு அனுப்பப்படுவார் என சிறைச்சாலைத்துறை தெரிவித்திருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!