Latestமலேசியா

நஜீப்பிற்கு பேரரசரிடம் மன்னிப்பு கோரும் மகஜரை வழங்க ஆதரவாளர்கள் இஸ்தானா நெகாரவில் கூடினர்

கோலாலம்பூர், ஆக 24 – நஜீப்பிற்கு அரச மன்னிப்பை பெறும் பொருட்டு அதற்கான மகஜரை பேரரசரிடம் சமர்ப்பிப்பதற்காக இன்று இஸ்தானா நெகாராவில் அந்த முன்னாள் பிரதமரின் 300க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கூடினர். மலேசிய ஒற்றுமை குழு இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தங்களை கூறிக்கொண்ட அந்த தரப்பினர் மகஜரை சமர்ப்பிக்கும் நிகழ்வை ஏற்பாடு செய்தனர். அரச மன்னிப்புடன் மேலும் சில கோரிக்கைகளும் இன்றைய மகஜரில் முன்வைக்கப்பட்டதாக அந்த இயக்கத்தின் தலைவரான சைட் முகமட் இம்ரான் சைட் அப்துல் அஸிஸ் தெரிவித்தார். முதல் கோரிக்கை உடனடியாக நஜீப்பிற்கு அரச மன்னிப்பு வழங்க வேண்டும் . இரண்டாவதாக சட்டத்துறை தலைவர் இட்ருஸ் ஹருன் மற்றும் எம் .ஏ.சி.சி யின் ஆணையர் அஸாம் பாக்கி மற்றும் சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு ஆணயமான அம்லாவின் இயக்குனரான ஆணையரை பேரரசர் அழைத்து நீதிபதி முகமட் நஸ்லான் நலன் சம்பந்தப்பட்ட ஆதரங்களை பரிசோதிப்பதற்கு நடவடிககை எடுக்க வேண்டும்.

இதனிடையே நஜீப்பிற்கான அரச மன்னிப்பு பெறுவதற்கான நடவடிக்கையில் மலேசிய அரசாங்கம் அதாவது பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி பேரரசருக்கு கடிதம் எழுத வேண்டும் என்றும் சைட் முகமட் இம்ரான் கேட்டுக்கொண்டார். முடிந்தவரை தேசிய தினத்தன்று நஜீப்பிற்கு மன்னிப்பு வழங்க வேண்டுமென பேரரசரை தாங்கள் கேட்டுக்கொள்வதாககவும் அவர் தெரிவித்தார். அதோடு அரசாங்கத்திற்கான ஆதரவை அம்னோ தலைவர் அகமட் ஸாஹிட் ஹமிடி மீட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!