Latestமலேசியா

நஜீப் இன்னும் அபராதங்களை செலுத்தவில்லை; நினைவுறுத்திய கைரி

கோலாலம்பூர், மார்ச் 22 – SOP விதிமுறையைக் கடைப்பிடிக்கத் தவறியதற்காக , இஸ்கண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் கிட் சியாங்கிற்கு , அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

முன்னதாக, கடந்த வார இறுதியில் நடைபெற்ற DAP பொதுப் பேரவையின் போது, கட்சி உறுப்பினர்களைக் கட்டியணைத்த, லிம் கிட் சியாங்கிற்கு அபராதம் விதிக்கப்படாதது குறித்து, முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் கேள்வியெழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளிக்கும் வகையில், லிம் கிட் சியாங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டு விட்ட தகவலை, கைரி தமது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளங்களின் மூலமாக உறுதிப்படுத்தினார்.

அதே வேளை, ஜோகூர் மாநிலத் தேர்தலின்போது விதிக்கப்பட்ட அபராதத்தை நஜிப் துன் ரசாக் இன்னும் செலுத்தாமல் இருப்பதை கைரி தமது பதிவில் நினைவுறுத்தியிருக்கிறார்.

அத்துடன், பதிவுபெற்ற அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் மேலும் நான்கு அபராதக் கடிதங்களை நஜீப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பதாகவும், அவற்றை உடனடியாக பெற்றுக் கொள்ளும்படியும் சுகாதார அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!