
ஈப்போ, ஆகஸ்ட் 28 – சிறையிலிருந்து டத்தோ ஶ்ரீ நஜீப் முன்கூட்டியே விடுவிக்கப்பட்டால் , பொது மக்கள் ஏமாற்றம் அடையக் கூடுமென, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.
நஜிப்பிற்கு அரச மனிப்பு வழங்குவதா இல்லையா என்பதை பேரரசரே முடிவு செய்வார். அதற்கு பிரதமர், நஜீப்பிற்கு ஏன் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டுமென விளக்கி பேரரசருக்கு கடிதம் வழங்க வேண்டுமென துன் மகாதீர் குறிப்பிட்டார்.