Latestஉலகம்சிங்கப்பூர்

உலகின் ருசியான சாண்ட்விச் பட்டியலில் சிங்கப்பூரின் காயா ரொட்டி

சிங்கப்பூர், மார்ச் 13 – மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் பிரியமான காலை உணவாக வலம் வருவது காயா டோஸ்ட்.

சமீபத்தில் அந்த காயா டோஸ்ட் தான் உலகளவில் முதல் 50 சுவையான சாண்ட்விச்களில் இடம்பிடித்துள்ளது என சமையல் இணையதளமான டேஸ்ட் அட்லஸ் அறிவித்துள்ளது.

இதில் மலேசியாவை விடுத்து சிங்கப்பூரின் காய டோஸ்ட் தான் 42ஆம் இடத்தில் வந்துள்ளது.

பிரிட்டிஷ் கப்பல்களில் இருந்த ஹைனானீஸ் சமையல்காரர்கள், சிங்கப்பூரில் குடியேறியே போது இந்த உணவை சிங்கப்பூரில் விற்கத் தொடங்கியதாக டேஸ்ட் அட்லசின் தெரிவிக்கிறது.

எவ்வாறாயினும், பாரம்பரிய பிரிட்டிஷ் ஜாமை மாற்றியமைத்து, தற்போது வாட்டிய ரொட்டியில் காயா, தேங்காய்ப் ஜாம், என தனித்துவமாக உள்ளூர் சுவையுடன் இது செய்யப்படுவதே தனி சுவையாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!