
கோலாலம்பூர், ஜூன் 8 – முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீண்டும் அம்னோவிற்கு திரும்புவதற்கு அம்னோ இளைஞர் பிரிவு உறுதியளித்திருப்பதாக அவரது புதல்வரான நிஷார் நஜீப் தெரிவித்தார். இன்று நடைபெற்ற அம்னோ இளைஞர் பிரிவு கூட்டத்தில் நஜீப்பிற்கு வழங்கப்பட்ட விருதை அவரது சார்பில் தாமும் தமது சகோதரர் Nazifuddin னும் பெற்றுக்கொண்டதாக நிஷார் கூறினார். அம்னோ இளைஞர் பிரிவு வழங்கியிருக்கும் கௌவரம் குறித்து தாங்கள் நெகிழ்ச்சியடைந்திருப்பதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காஜாங் சிறையில் தண்டனை அனுபவித்துவரும் தமது தந்தையை வெளியே கொண்டு வருவதற்காக போராடிவரும் அம்னோவின் முயற்சிகளுக்கு நிஷார் நன்றி தெரிவித்துக் கொண்டார்.