
தமிழகம்; ஆக 6 – தமிழகத்தில் நடமாடும் நகைக்கடை என்றழைக்கப்பட்டவர் ஹரி நாடார். உடல் முழுவதும் அதிகமான நகைகளை வாரி அணிந்துக் கொண்ட போகும் அவரை பார்த்து பல ட்ரோல்கள் செய்யப்பட்டன. இந்நிலையில், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரி நாடாரை போலிசார் நிர்வாணப்படுத்தி சித்ரவடஹி செய்வதாக அவரது மனைவி புகார் அளித்துள்ளார். தம்மை நிர்வாண கோலத்தில் படம் எடுத்தும் போலிசார் வைத்துள்ளதாக தனக்கு தன் கணவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக அவரது மனைவி கூறியுள்ளார். கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாகிவிட்ட போதிலும், தனக்கு ஜாமின் வழங்காமல் கர்நாடக போலிசார் சித்ரவதை செய்வதாக அவர் தன் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.