Latestமலேசியா

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தொழிலதிபர் ரூபாலி பருவாவை கரம் பிடித்தார்

காதல் வசப்படுவதும், திருமண பந்தத்தில் இணைவதும், வயதை வைத்து வரையறுக்க முடியாது.

இந்திய நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி நேற்று ரூபாலி பருவாவை திருமணம் செய்துக் கொண்டதாக அறிவித்துள்ளார்.

60 வயதான ஆஷிஷுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும்.

கொல்கத்தா கிளப்பில், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் புடைசூழ ஆஷிஷ் திருமணம் செய்துக் கொண்டார்.

அவர்களின் திருமணப் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

அந்த புகைப்படங்களில், கேரளாவின் பாரம்பரிய உடையான முண்டு அணிந்து ஆஷிஷ் மாப்பிள்ளை போல காணப்படும் வேளை ; அஸ்ஸாமிலிருந்து தருவிக்கப்பட்ட வெள்ளை மற்றும் தங்க நிறத்திலான புடவையில், தங்க நகைகளுடன் ஜொலிக்கிறார் ரூபாலி.

“என் வாழ்க்கையின் இந்த கட்டத்தில் ரூபாலியை திருமணம் செய்துக் கொள்வது வார்த்தைகளால் விளக்க முடியாத மிகச் சிறந்த உணர்வு. காலையில் நீதிமன்றத்தில் திருமணம். மாலையில் சிறப்பு விருந்துபசரிப்புக்கு ஏற்பாடு செய்தோம்” என டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு வழங்கிய நேர்காணலில் நடிகர் ஆஷிஷ் குறிப்பிட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!