
சென்னை, செப் 8 – பிரபல நடிகர் மாரிமுத்து மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். 57 வயதாக அவருடைய மரணம் சினிமா திரையுலகினருக்கு எதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தமிழ்திரைப்படங்களில் வில்லன், குணசித்திர பாத்திரம் என பல கதாபாத்திரங்களை இவர் ஏற்று நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமடைந்தார் நடிகர் மாரிமுத்து. குறிப்பாக ஏமா ஏய் என்று இவர் கூறும் வசனம் பலரின் கவனத்தை ஈர்த்தது எனலாம். இவர் கண்ணும் கண்ணும், புலிவால் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற நிலையில், மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அனைவரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.