Latestஉலகம்

நடிகர் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை , நவ 24 – உடல் நலக் குறைவு காரணமா நடிகர் கமல்ஹாசன் சென்னை, போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் காரணமாக சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்ட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே வழக்கமான பரிசோதனைக்காகவே கமல் ஹாசன் மருத்துவமனைக்கு சென்றுள்ளதாகவும் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் குடும்பத்தினர் கூறியுள்ளனர். இன்று அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறும் சாத்தியம் இருப்பதாக கூறப்பட்டது. தற்போது இயக்குனர் சங்கரின் இந்தியன் 2 படப்பிடிப்பு பணிகளிலும் பிக் போஸ் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசன் பங்கேற்று வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!