
சென்னை , மே 23 – திரையுலக பிரமுகர்கள், நடிகர்கள் மற்றும் ரசிகர்களின் அஞ்சலிக்குப் பின் நடிகர் சரத் பாபுவின் உடல் கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள மயானத்திற்கு கொண்டுவரப்பட்டு இன்று தகனம் செய்யப்பட்டது. சென்னை தி.நகரில் உள்ள நடிகர் சரத் பாபுவின் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சூர்யா, கார்த்திக்
சரக்குமார், பாக்கியராஜ், பார்த்திபன் , நடிகை சுஹாசினி உட்பட பலர் நேரில் வந்து சரத்பாபுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழ், தெலுங்கு , கன்னடம் , மலையாளம் என பல மொழிகளில் வந்த திரைப்படங்களிலும் நடித்துள்ள சரத் பாபு பட்டின பிரவேசம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுநீரகம், கல்லீரல் ,நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புக்களை பாதிக்கும் செப்ரிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சரத்பாபு ஹைதரபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தபோது நேற்று காலமானார்.