Latestசினிமா

நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

சென்னை, ஜன 10- நடிகர் சிம்புவுக்கும் புதுமுகநடிகை நிதி அகர்வாலுக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருப்பதாக கோலிவூட் வட்டாரங்கள் தெரிவித்துவருகின்றன.

பூமி, ஈஸ்வரன் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நிதி அகர்வால். சமீபத்தில் வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படப் படப்பின்போது சிம்புவுக்கும் இவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், 38 ஆண்டுகள் சினிமாத்துறையில் ஈடுபட்டு சாதனை படைத்ததற்காக சிம்புவுக்கு வரும் ஜனவரி 11ஆம் தேதி கவுரவ டாக்டர் வழங்கப்பட்டு சிறப்பு செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். முன்னதாக, எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விக்ரம், விஜய் உள்ளிட்ட பல முன்னணி கலைஞர்களுக்கு இந்தக் கவுரவ பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!