Latestசினிமா

நடிகர் பார்த்திபனுக்கு ஐக்கிய அரபு சிற்றரசின் கோல்டன் விசா

துபாய், டிச 28 – ஐக்கிய அரபு சிற்றரசு அரசாங்கம் பிரபல நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்தது. சினிமா துறையில் ஆற்றிய பங்கிற்காக அவருக்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டது. ஐக்கிய அரபு சிற்றரசின் கோல்டன் விசாவை பெறும் முதல் தமிழ் நடிகர் என்ற பெருமையை பார்த்திபன் பெறுகிறார்.

துபாயின் அடையாள மற்றும் குடியுரிமைக்கான ஆணையத்தின் அதிகாரி பார்த்திபனுக்கு அந்த கோல்டன் விசாவை வழங்கினார். கோல்டன் விசா என்பது ஐக்கிய அரபு சிற்றரசில் நீண்ட கால குடியிருப்பு விசா முறையாகும். ஐந்து முதல் 10 ஆண்டுகள்வரை இந்த விசா முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த விசா இயல்பாகவே புதுப்பிக்கப்படும் முறையையும் கொண்டுள்ளது. பல்வேறு துறையைச் சேர்ந்த சாதனையாளர்கள், தொழில் வல்லுநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தனிப்பட்ட திறன்களை கொண்டவகளுக்கு ஐக்கிய அரபு சிற்றரசு அரசாங்கம் இந்த விசாவை வழங்கி வருகிறது.

தமக்கு கோல்டன் விசா விருது வழங்கப்பட்டதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்ட பார்த்திபன் ஐக்கிய அரசு சிற்றரசு அரசுக்கும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!