சென்னை, பிப் 9 – நடிகர் பிரேம்ஜி அமரன் தனது முரட்டு சிங்கிளான வாழக்கைக்கு விடை கொடுத்து விட்டு காதலில் விழுந்திருப்பதாக நம்பப்படுகிறது.
ஆதலால் காதல் செய்வீர் , கில்லாடி போன்ற திரைப்படங்களில் பாடியவரான பாடகி வினைதாவை அவர் காதலிப்பதாக கூறப்படுகிறது. அவ்விருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பாடகி வினைதா வெளியிட்டுள்ளார். மேலும் அந்த படத்துடன் ‘உண் கண்களில் என்னை சிறைபிடித்திருக்கின்றாய்’ எனும் பதிவையும் அந்த பாடகி பதிவிட்டுள்ளார். அதையடுத்து அவ்விருவரும் காதலிக்கூடுமென பேசப்படுகின்றன.