Latestஇந்தியா

நடிகர் புனித் குமார் மறைவுக்குப் பின் 7,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கண் தானம்

பெங்களூரு, நவ 25- புகழ்பெற்ற தென்னிந்திய நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவையடுத்து, கர்நாடகாவில் பலர் கண் தானம் செய்ய முன்வந்திருக்கின்றனர்.

மக்களுக்குப் பல சேவைகளாற்றி வந்த புனித் குமார் இறப்பதற்கு முன்னதாகவே கண் தானம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, அவரின் மறைவுக்குப் பின்னர் கிட்டதட்ட 7,000க்கும் மேற்பட்டோர் கண் தானம் செய்ய முன்வந்திருப்பதாக Narayana Nethralaya மருத்துவமனை நிர்வாகி Bhujang Shetty தெரிவித்தார். புனித் குமார் இறந்த சில நாட்களிலேயே 112 கண்கள் தானம் செய்யப்பட்டதையும் அவர் குறிப்பிட்டார்.

அவரின் ரசிகர்கள் பலரும் மருத்துவ மையங்களின் முன்பு, புனித்குமார் படங்கள் ஏந்திய பதாகைகளுடன் கண் தானம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!