Latestஇந்தியாசினிமா

நடிகர் மன்சூர் அலிகான் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி !

சென்னை, மே 10 – பிரபல நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

1990ம் ஆண்டு சினிமாவில் நடிகராக அறிமுகமான மன்சூர் அலிகான், வில்லனாகவும், காமெடியனாகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

சிறுநீரகத்தில் கல் பிரச்னை காரணமாக மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ள நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

நடிகர் விவேக் மரணத்திற்கு அவர் எடுத்து கொண்ட கொரோனா தடுப்பூசிதான் காரணம் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட மன்சூர் அலிகான் மீது வழக்கும் தொடுக்கப்பட்டிருந்தது.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கோவை, தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டு குறைவான வாக்குகளை வாங்கி தோல்வி அடைந்தார் என்பதும் குறிபிடத்தக்கது.

தொடர்ந்து பல நடிகர்கள் மரணமடைந்து வரும் நிலையில், மன்சூர் அலிகான் பற்றிய இந்த செய்தி, பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!