Latestசினிமா

நடிகர் ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது

சென்னை, ஏப் 1- ஆண்டுதோறும் சினிமா துறையில் இந்திய அரசாங்கம் வழங்கும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இம்முறை நடிகர் ரஜினிக்கு வழங்கப்படும். இந்திய சினிமாவில் நடிப்பாற்றலின் மூலம் சிறந்த பங்கை ஆற்றியதற்காக ரஜினிக்கு 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக இந்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பிரபல பாடாகி ஆஷா போஷ்லே, நடிகர் மோகன்லால், பிஸ்வாஜிட் சட்டர்ஜி, பாடகர் சங்கர் மகாதேவன் மற்றும் சுபாஷ் காய் ஆகியோரைக் கொண்ட நடுவர் குழு இம்முறை தாதா சாகேப் பால்கே விருதுக்கு ரஜினிகாந்தை முன்மொழிந்தது. சினிமா துறையில் ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குனர் கே.பாலச்சந்தர் ஆகியோரும் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றுள்ளனர்.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் நடிகர் ரஜினிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!