Latestஇந்தியாசினிமா

நடிகர் விவேக் மரணத்திற்கு கோவிட் தடுப்பூசி காரணமல்ல-மத்திய ஆய்வு குழு

சென்னை, அக் 22 – தமிழ் சினிமாவின் , முன்னனி நகைச்சுவை  நடிகரான  விவேக்கின் மரணத்திற்கும், கோவிட் தடுப்பூசிக்கும்   தொடர்பு இல்லை;  அவர்  உயர் ரத்த அழுத்தத்தால்  தான் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துள்ளதாக,  தடுப்பூசி குறித்து ஆய்வு செய்யும்  மத்திய அரசின்  குழு விளக்கம்  அளித்திருக்கிறது.

தடுப்பூசி போட்டுக் கொண்டு இரு தினங்களுக்குப் பின்னர், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி  நடிகர் விவேக்  மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார்.

அவரது மறைவு,  திரையுலகினர் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்தது.

இந்நிலையில்,  அவரது மரணம்  கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் ஏற்பட்டதாக என கூறி  விழுப்புரத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான  சரவணன்,  தேசிய  மனித  உரிமை   ஆணையத்தில்  புகார் அளித்திருந்தார்.

அதையடுத்து,  அந்த புகாரை  தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்திய வேளை,  அந்த விசாரணையில்  விவேக்கின் மரணத்திற்கும் கோவிட் தடுப்பூசிக்கும்  தொடர்பில்லை என தெரிய  வந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!