கோலாலம்பூர், பிப் 12- நடிகர் விஷ்ணு விஷால் நடித்து தயாரித்துள்ள FIR திரைப்படத்திற்கு மலேசியாவில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களில் ஒருவரான மனு ஆனந்த் இயக்கிய இந்தத் திரைப்படம் நேற்று (பிப் 11) திரையரங்குகளில் ஒளிபரப்பத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மலேசியா, குவைத், கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள தணிக்கை வாரியம் படத்தை வெளியிடத் தடை விதித்துள்ளன.
படத்தில் இஸ்லாமிய இளைஞனாக விஷ்ணு விஷால் நடித்திருப்பதோடு, தீவிரவாதம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருப்பதால் படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.